Read in English
This Article is From Jul 28, 2018

‘தைரியமான முடிவுகளை எடுங்கள்!’- இம்ரான் கானுக்கு அசாருதீனின் ஆட்வைஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கானின் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி, அந்நாட்டின் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது

Advertisement
உலகம்
Hyderabad:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி, அந்நாட்டின் தேசிய சட்டசபைக்கான தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், அவர் பிரதமராக அரியணை ஏற வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான முகமது அசாருதீன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அசாருதீன் மேலும், ‘கிரிக்கெட் களத்தில் அவர் எடுத்த முடிவுகள் மிகவும் தைரியமானதாகவும் தனித்தன்மையானதாகவும் இருந்தன. அதைப் போலத்தான் பாகிஸ்தானின் பிரதமரானாலும் அவர் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஒரு கிரிக்கெட் அணிக்கு தலைமை வகிப்பதும் ஒரு நாட்டுக்கு தலைமை வகிப்பது இருவேறு விஷயங்கள் ஆகும்’ என்றவரிடம்,

‘இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் நேர்மறையான மாற்றங்கள் நிகழுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அசாருதீன், ‘முதலில் இம்ரான், அவரது நாட்டில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளை தீரக்க முயல வேண்டும். பின்னர் தான் பிற பிரச்னைகளை தீர்ப்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். பாகிஸ்தான் பக்கம் இருந்து நிறைய விரும்பத்தகாத விஷயங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவைகள் ஓய்ந்து அமைதி திரும்பினால் தான் இந்திய தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். பல விஷயங்களை அவர் முறையாக்க வேண்டும்’ என்று பதிலளித்தார். 

Advertisement

மேலும் அவர், ‘ஒரு கிரிக்கெட் வீரர், நாட்டின் பிரதமராக உருவெடுப்பது என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம் அல்ல. அவர் பிரதமரானால் மகிழ்ச்சி’ என்று முடித்தார். 

Advertisement