This Article is From Nov 01, 2019

போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டமைப்பில் இருந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், மற்றவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் - மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவர் சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதை விடுத்து, போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது கொடுங்கோன்மை என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் 7 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிலர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டமைப்பில் இருந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற நிலையில், மற்றவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே அங்கீகரிக்கப்படாத மருத்துவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு மருத்துவ கல்லூரியில் படிப்போருக்கு தலா ரூ.1.24 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசு இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கிறது. நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அளித்தால் எப்படி நிறைவேற்ற முடியும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். 

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவல், அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் - அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் மற்றும் நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை!

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என்று அவர் விமர்சித்துள்ளார்.

.