This Article is From Jul 05, 2018

அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளி கொண்டு வரும் ‘டேலன்ட் ஹன்ட்’.

இந்த நிகழ்ச்சி ஜுலையிலிருந்து ஆகஸ்ட் 15 வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கிறது

அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளி கொண்டு வரும் ‘டேலன்ட் ஹன்ட்’.

அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களின் திறமைகளை மேடை ஏற்றுவதற்காக ‘Direction for volunteers’(D4V) என்ற அமைப்பு கடந்த ஆண்டு டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியை தொடங்கியது.

பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சியை அரசு பள்ளி மாணவர்களிடமும் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இதன் நோக்கம்.

இந்த நிகழ்ச்சி ஜுலையிலிருந்து ஆகஸ்ட் 15 வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கிறது.இதை அந்த அந்த ஊர்களிலிருக்கும் தன்னார்வலர்கள் முன்வந்து D4V உடன் இணைந்து நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் அரசு பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதில் 1 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துக் கொண்டு ஓவியம், நடனம், நடிப்பு என ஏதேனும் திறமையை வெளிப்படுத்தலாம். இந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கோயம்பத்தூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் நடக்க உள்ளது.

“இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை முடிந்தவரை நாங்களே எடுத்துச் சென்றுவிடுகிறோம். மாணவர்கள் அந்த நேரத்தில் திறமையை வெளிப்படுத்த தயாராகயிருந்தால் மட்டும் போதும்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் கிரிதரன். மேலும் இந்நிகழ்ச்சிகான செலவுகளுக்கு அமைப்பிற்குள் இருப்பவர்களும் சில நேரங்களில் ஸ்பான்சர்களும் உதவுவார்கள் என்கிறார்.

இந்த நிகழ்ச்சியை நடத்த அல்லது பங்குபெற விரும்பும் பள்ளிகள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த லிங்கில் http://bit.ly/D4V-THunt விவரங்களை நிரப்ப வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களாக உதவ விரும்புவோர் கிரிதரனை தொடர்புக் கொள்ளலாம் (9962962800).

.