இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் தமன்னா
New Delhi: நடிகை தமன்னா, தான் ஒப்பந்தம் செய்யும் படங்களில் நடிக்கும்போது, முத்தம் கொடுக்கும் காட்சிக்கு மட்டும் நோ சொல்லி விடுவாராம். ஆனால், அந்த விதியை ஒரேயொரு நபருக்காக எடுக்கத் தயார் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன்னா, ‘நான், திரைப்படங்களில் முத்தம் கொடுக்க மாட்டேன். எனது ஒப்பந்தத்திலும் அது குறித்து தெரிவித்து விடுவேன். ஆனால், ஹிரித்திக் ரோஷனுக்கு மட்டும் அந்த விதியிலிருந்து விலக்கு அளிப்பேன்' என்று பளார் என்று சொல்லி சிரித்துள்ளார்.
தமன்னா மேலும் கூறுகையில், ‘நான் சமீபத்தில் ஹிரித்திக் ரோஷனை நேரில் பார்த்தேன். அப்போது, செய்வதறியாமல் அவரிடம் சென்று, ‘நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை' என்றேன். அவர் அதை ஆமோதித்துவிட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற அவர், ‘உங்களுக்கு ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா?' என்றார். நானும், ‘ஆமாம்' என்றேன்' என ஹிரித்திக் உடனான சந்திப்பை மகிழ்ச்சித் ததும்ப விளக்கினார்.