ஹைலைட்ஸ்
- சங்கீதா பிடியிலிருந்த பல பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்
- பட வாய்ப்புகளை வாங்கித் தருவதாக பெண்கள் ஏமற்றப்பட்டுள்ளனர்
- பல பிரபல டிவி சீரியல்களில் சங்கீதா நடித்து வந்தார்
Chennai: தமிழ் சின்னத்திரை நடிகை சங்கீதா பாலன், விபச்சாரத் தொழில் நடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சென்னையில் பல பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக கூறப்பட்டு உள்ளது. அவர் பிடியில் இருந்த பெண்களை மீட்டு தற்போது மறுவாழ்வு மையத்தில் போலீஸார் ஒப்படைத்து உள்ளனர். சங்கீதா பாலனுக்கு சதீஷ் என்கின்ற ஒரு பார்டனர் இருந்ததாக தெரிகிறது. அவர் தான் சங்கீதா பாலனுக்கு பெண்களை கூட்டி வந்து கொடுப்பவர் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படம் மற்றும் சின்னத்திரைத் தொடர்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, பெண்களை இருவரும் சேர்ந்து ஏமாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சங்கீதா கடந்த 1996 ஆம் ஆண்டு கருப்பு ரோஜா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் பல தமிழ் திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். வாணி ராணி, செல்லமே அவள், வள்ளி போன்ற சின்னத்திரை தொடர்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.