Read in English
This Article is From Nov 22, 2018

பட போஸ்டரில் மது பாட்டிலுடன் விஷால்: ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

மது பாட்டிலுடன் நடிகர் விஷால் இருப்பது போன்ற பட போஸ்டர் ஒன்று வெளியானதை தொடர்ந்து, அந்த போஸ்டர் படங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

Advertisement
Tamil Nadu

கையில் மதுபாட்டிலுடன் ஜிப்பின் முன்பகுதியில் நடிகர் விஷால் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் வெளியானது.

Chennai:

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஷால் கையில் மது பாட்டிலுடன் உள்ள இந்த போஸ்டரை திரும்ப பெற வேண்டும் என பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நடிகர் விஷால் நடித்து வரும் அயோக்கியா படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், கையில் மதுபாட்டிலுடன் ஜிப்பின் முன்பகுதியில் நடிகர் விஷால் அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர்கள் சமூகவலைதளங்களில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்து வருகிறது.

இந்த போஸ்டர் குறித்து விஷாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், விஷாலிடம் இருந்து சமூக பொறுப்பை எதிர்ப்பார்த்தேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், விஷால் தோன்றும் போஸ்டர்கள் உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன என்று அவர் ட்விட்டர் பதிவில் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் முதல் போஸ்டரிலும் நடிகர் விஜய் புகைப்படிப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இதைத்தொடர்ந்து பாமகவினர் அந்த போஸ்டரை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சர்கார் படத்தின் புரமோஷனுக்கு சர்ச்சைக்குரிய அந்த போஸ்டர்கள் பயன்படுத்தப்படவில்லை.

Advertisement


 

Advertisement