This Article is From Feb 16, 2019

திருச்சிக்கு வந்தடைந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள்!

நேற்று முன் தினம் புல்வாமா தாக்குதல் நடந்தது

Advertisement
தமிழ்நாடு Posted by

இந்தத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரழந்தனர்

Highlights

  • புல்வாமாவில் நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதல்
  • 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர்
  • காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் மரணம் அடைந்த தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் மற்றும் கேரள, கர்நாடக வீரர்கள் நால்வரின் உடல்கள் தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பப்டது.

நான்கு உடல்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.பி-க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜம்மூ- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவச்சந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சத்தை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறினார். 

Advertisement

இந்நிலையில் இன்று, ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் குடும்பத்தினரில் ஒருவருக்கு தமிழக அரசில் வேலை தரப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

 

Advertisement

மேலும் படிக்க - 80 மீட்டர் தூரத்தில் சிதறிக்கிடந்த வீரர்களின் உடல் – கொடூரத்தனத்தின் உச்சம்

Advertisement