Read in English
This Article is From Sep 19, 2019

''இந்தியாவின் அடையாளம் இந்தி அல்ல; தமிழுக்கே அந்த தகுதி உண்டு'' - அமித்ஷாவுக்கு திமுக பதிலடி

திமுகவின் எம்.பியும் செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் இந்தியாவின் அடையாள மொழியை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு இந்தியைவிட தமிழ் மொழிக்குத் தான் தகுதி உண்டு என்று கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

அமித் ஷா செப்டம்பர் 14 அன்று இந்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். (File photo)

Highlights

  • Amit Shah had on September 14 advocated greater use of Hindi
  • He said "it is very essential that the entire country has one language"
  • He has clarified that he didn't want imposition of Hindi on anyone
Chennai:

இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழியை மாற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இந்தியாவின் அடையாளமொழியாக இந்தியை விட தமிழ் மொழிக்குத்தான் உரிய தகுதி உண்டு என்று திமுக வாதிட்டுள்ளது. 

அமித் ஷா செப்டம்பர் 14 அன்று இந்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். “நாடு முழுமைக்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் அவசியம். அது உலகில் அதன் அடையாளமாக மாறும்” என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் கருத்துக்கு திமுக மற்றும் பிற தமிழ்நாட்டுக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து அமித் ஷா “தான் இந்தியை திணிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தினார். 

திமுகவின் எம்.பியும் செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் இந்தியாவின் அடையாள மொழியை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு இந்தியைவிட தமிழ் மொழிக்குத் தான் தகுதி உண்டு என்று கூறியுள்ளார்.

Advertisement

தமிழ் மொழி உலகிலேயே பழமை வாய்ந்த மொழியாகும். இலங்கை, சிங்கபூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். இலக்கியங்கள் நிறைந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் கலாசாரம் தெற்காசிய நாடுகளில் வெகுவாக பரவி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பல நாடுகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தி பேசுகிறார்கள் என்றால் அதே அளவுக்கு இந்தி பேச மக்களும் இந்தியாவில் உண்டு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Advertisement

ஆர்.எஸ்.எஸின் சித்தாந்த்தை திணிக்கவே நாடெங்கும் இந்தியை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

Advertisement