This Article is From Apr 19, 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளளன. இந்த முடிவுகளை 'TN HSC Results' மொபைல் ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

'TN HSC Results' ஆப் மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணையதளங்களான tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in. ஆகிய மூன்று தளங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இது தவீர மாணவர்களுக்கு வசதியாக மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

TN +2 Result 2019: மொபைல் ஆப்-ல் முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?

கூகுள் ப்ளே ஸ்டோரில் 'TN HSE Results' ஆப் என சர்ச் செய்து ரிசல் வெளியாகும் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ப்ளஸ் டூ - முடிவுகளை அறிவது எப்படி?

1. 'TN HSC Results' மொபைல் ஆப் திறக்கவும்
2. ரோல் நம்பரை குறிப்பிட வேண்டும்.
3. பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்
4. சப்மிட் செய்ய வேண்டும்.
5. இதன்பின்னர் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை www.dge.tn.nic.in http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

.