This Article is From May 07, 2020

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 8 பேர் படுகாயம்!!

நெய்வேலி அனல் மின் நிலையம் 3,940 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்று விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதியில் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

நெய்வேலி அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 8 பேர் படுகாயம்!!

என்.எல்.சி.யில், 15 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 27 ஆயிரம்பேர் பணியாற்றி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது
  • தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
  • தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Chennai:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து இன்று ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

படுகாயம் அடைந்த அனைவரும் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆவர். இதுகுறித்து என்.எல்.சி.யின் தலைவர் ராகேஷ் குமார் கூறுகையில், 'தொழிலாளர்களுக்கு எங்களால் முடிந்த சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறோம். தீ இன்னும் எரிந்தாலும், கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது. 3 பாய்லர்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

காயம் அடைந்தவர்களில் தினசரி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும் அடங்குவர். முதல் உதவிக்கு பின்னர் அவர்கள் அனைவரும் திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாய்லர் வெடித்தது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மாலை 5 மணிக்கு இரண்டாவது பிளான்ட்டின் 6-வது யுனிட்டில் விபத்து ஏற்பட்டது. 3 பாய்லர்களின் நிலைமை மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது' என்றார்.

மின் உற்பத்தி அதிகம் ஆனதால்தான் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை மறுத்துள்ள அதிகாரிகள், பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்கள் நல்லமுறையில் இருப்பதாக கூறியுள்ளனர். 

.