Read in English
This Article is From Aug 10, 2019

தமிழக அரசின் துணை மருத்துவ படிப்புக்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறை தொடங்கியது

டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 9, 2019 அன்று தொடங்கும்.

Advertisement
தமிழ்நாடு

தமிழ்நாடு சுகாதார துறையின் வலைத்தளமான tnhealth.org இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi :

தமிழக அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை மருத்துவம் மற்றும் நர்ஸிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை அறிவித்துள்ளது. 

துணை மருத்துவ படிப்புகள் பட்டப்படிப்பு, டிப்ளோமா முதல் சான்றிதழ் படிப்புகள்  வரை வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு சுகாதார துறையின் வலைத்தளமான tnhealth.org இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பும் பாடத்திட்டத்திற்கான தகுதியை அறிந்து கொள்ளலாம். துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19, 2019 (மாலை 5 மணி) வரை மட்டுமே.

டிப்ளோமா இன் நர்சிங் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 26, 2019 அன்று காலை 10:00 மணிக்கு தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 4, 2019 மாலை 5  மணி வரை மட்டுமே. 

துணை மருத்துவம் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 9, 2019 அன்று தொடங்கும். 

Advertisement

இந்த படிப்புகளில் சேருவதற்கான தேர்வு தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். 

Advertisement