This Article is From Jan 02, 2019

8-ம்தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் - சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது

Advertisement
Tamil Nadu Posted by

தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல்நாள் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். அப்போது பல பிரச்னைகளை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கவர்னருடைய உரை இன்று முடிந்திருக்கிறது. இதன் பின்னர் நாளை காலை முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் இரங்கலுக்கு குறிப்புகள் வாசிக்கப்படும். இரங்கல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு நிறைவேற்றப்படும். 8-ம்தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்.

Advertisement

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்மா நாராயண் சிங், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், மருத்துவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மறைவு, கஜா புயலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்படும்.

இதன்பின்னர் வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் அவை ஒத்தி வைக்கப்படும். ஜனவரி 4-ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

Advertisement
Advertisement