Read in English
This Article is From Oct 26, 2019

10,11,12 -ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி...!

புதிய கல்விக் கொள்கை காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

தேர்வுக்கான நுழைவு அட்டை தேர்வின் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

New Delhi:

தமிழக அரசு தேர்வு இயக்குநரகம்  10,11 மற்றும் 12 வது வகுப்பிற்கான தேர்வு நேரத்தை 2மணி 45 நிமிடங்களிலிருந்து 3 மணி நேரம் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. புதிய கல்விக் கொள்கை காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

 தேர்வு நேர மாற்றம் இந்த கல்வியாண்டு முதல் பொருந்தும். தேர்வு நேரம் குறித்த தகவல்களையும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ட்வீட் செய்துள்ளார். பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்வு திட்டம் வேறுபட்டது. அடுத்த ஆண்டு வாரியத் தேர்வுக்கு வருகை தரும் மாணவர்கள் தேர்வு நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வுக்கான நுழைவு அட்டை தேர்வின் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு வினாத்தாள் படிக்க 15 நிமிட நேரம் வழங்கப்படும். 2019 ஆம் ஆண்டில் 10 வகுப்பு பொது தேர்வில் 95.2 சதவீதமும், 11 ஆம் வகுப்பு வாரிய தேர்வில் 95 சதவீத மாணவர்களும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வில் 91.3 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 

Advertisement
Advertisement