This Article is From Jun 18, 2018

நீத்தி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் வைத்த முக்கிய கோரிக்கைகள்

டில்லியில் நேற்று, பிரதமர் தலைமையில் நடந்த நீத்தி ஆயோக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் தமிழகத்துக்கான தேவைகளையும், திட்டங்களையும் விளக்கிக் கூறினார்

Advertisement
இந்தியா Posted by
டில்லியில் நேற்று, பிரதமர் தலைமையில் நடந்த நீத்தி ஆயோக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் தமிழகத்துக்கான தேவைகளையும், திட்டங்களையும் பற்றி விளக்கிக் கூறினார். அவர் வைத்த கோரிக்கைகளில் முக்கியமானவை இங்கே…
 
  1. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, விவாசாய சந்தையை ஒழுங்குபடுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
  2. ஆயுஷ்மான் பாரத் என்ற மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் முதல்வரின் காப்பீட்டு திட்ட முறையையே பயன்படுத்த பிரதமர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  3. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அம்மாவட்ட மக்களின் மருத்துவ உதவிக்காக, இரண்டு மாவட்டங்களிலும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க, கோரிக்கை விடுத்தார்.
  4. நோபல் பரிசுக்கு நிகராக, “காந்தி பசுமை பூமி விருது” என்ற விருதை அமைத்து, உலக அளவில் முக்கிய சாதனை படைத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.
  5. நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். மகாநதி - கோதாவரி- கிருஷ்ணா-பென்னாறு-பாலாறு-காவேரி-குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
  6. ஜி.எஸ்.டி நிதி பங்கீட்டில், மாநில அரசுக்கு அதிக பங்கீடு வழங்கும் வகையில் மாற்று பங்கீடு முறை அமைக்க வேண்டும். பல நாடுகளில் உள்ள திட்டங்கள் போல், மறைமுக வரி வருவாய் மாநிலங்களுக்கும், நேரடி வரி வருவாய் மத்திய அரசுக்கு செல்லும் வகையிலான முறையை பின்பற்றலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
  7. 14-வது திட்டக் கமிஷன் மாற்றங்கள் பொருத்தவரையில், தமிழகத்துக்கான வரி பங்கீட்டை 4.969 சதவிகிதத்தில் இருந்து 4.023 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதை பிரதமர் கவனத்தில் கொண்டு தீர்வு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Advertisement