Read in English
This Article is From Jul 25, 2018

வண்டலூர் ​பூங்காவின் ​சிங்கக்குட்டிக்கு 'ஜெயா' என்று பெயர் சூட்டிய முதலமைச்சர்

வண்டலூர் பூங்காவில் இருக்கும் 6 மாத சிங்கக்குட்டிக்கு ‘ஜெயா’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டியுள்ளார்

Advertisement
தெற்கு
Chennai:

சென்னை: வண்டலூர் பூங்காவில் இருக்கும் 6 மாத சிங்கக்குட்டிக்கு ‘ஜெயா’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டியுள்ளார்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்,54 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வண்டலூர் பூங்காவில் 10 பெண் சிங்கங்களும், ஆண் சிங்கங்களும் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 27 - ஆம் தேதி பிறந்த பெண் சிங்ககுட்டிக்கு ‘ஜெயா’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிட்டுள்ளார். விலங்கு பிரியரான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பூங்காவுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

2410 விலங்குகளுக்கும், 46 வகை பறவைகளுக்கும் வண்டலூர் பூங்கா இருப்பிடமாக உள்ளது. பூங்காவில் இருக்கும் 26 புலிகளுடன், மேலும் 4 புலிகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், புலிகளை சிறப்பான முறையில் பார்வையிட, கூடுதல் இருப்பிடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Advertisement
Advertisement