ஹைலைட்ஸ்
- 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும்
- 14,707 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்
- தேனி மாவட்ட குடிநீர் தேவை பூர்த்தியாகும்
தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கும் வரும் 17-ம் தேதி பெரியார் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இருபோக ஆயக்கட்டு பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17.6.2018 முதல் 120 நாட்களுக்கு நீர்த் திறந்து விடப்படும் என முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
இதன் மூலம், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய வட்டங்களில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்றும், மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். விவசாயிகள் நீர் திறப்பின் மூலம் பயன்பெறுமாறும், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.