This Article is From Jan 24, 2019

மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தாக்கு!

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தாக்கு!
Chennai:

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மேத்யூ சாமுவேல், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவருடன் தனிப்பட விரோதம் கிடையாது எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, கோடநாடு விவகாரத்தில், தமது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், கோடநாடு விவகாரத்தில், தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு பரப்புவதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள முதலமைச்சர் தரப்பு, தம்மை பற்றி அவதூறு பரப்ப தடை விதிக்கவும் மனுவில் கோரியிருந்தார்.

.