Read in English
This Article is From Apr 29, 2019

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.48 சதவீதம் அரசுப்பள்ளிகள் தேர்ச்சி! - முழு விவரம்..

TN SSLC Results: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 2019ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது.

Advertisement
தமிழ்நாடு Edited by

TN SSLC Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது.

New Delhi:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்(TN Results) 95.2 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 92.48 அரசுப்பள்ளிகள் தேர்ச்சியடைந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

பள்ளி வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதிம்:

1. அரசுப் பள்ளிகள் - 92.48 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement

2. அரசு உதவி பெறும் பள்ளிகள் - 94.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

3. மெட்ரிக் பள்ளிகள் - 99.05 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement

4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 95.42 சதவீதம் தேர்ச்சி பெற்றுளன.

5. பெண்கள் பள்ளிகள் - 96.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement

6. ஆண்கள் பள்ளிகள் - 88.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை(SSLC results) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் மற்றும் 38ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை,

Advertisement

tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

இது தவிர, ஆப் மூலம் தெரிந்து கொள்ள


‘TN SSLC Result' செயலியை எப்படி பயன்படுத்துவது?

-கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்

-இன்ஸ்டால் செய்யவும்

-செயலியைத் திறக்கவும்

-ரிசல்டு இருக்கும் இடத்தை சொடுக்கவும்

-பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை என்டர் செய்யுவும்

-பிற தகவல்களை சமர்பிக்கவும்

இதையடுத்து வெளியாகும் பக்கத்தில், மாணவரின் ரோல் நம்பர், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை மதிப்பெண்கள் வந்திருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

Advertisement