மாநிலத்தில் விளையாட்டு திறனாளிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. சட்டசபையில் பேசிய முதல்வர், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய திறமையான பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் உள்ளனர, அவர்களை ஊக்குவிக்க பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன என்றார்.
பேட்மிண்டன் பயிற்சி மையத்தை உருவாக்க இருப்பதாகவும், திறன் பெற்ற விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சி வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சி மையம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.
மாநிலத்தில் உள்ள திறமையான 50 விளையாட்டு வீரர்களை, (மாற்றுத்திறனாளிகள் உள்பட) அரசு தேர்ந்தெடுத்து, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்ல அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
விளையாட்டு பயிற்சிகளுக்கு தேவையான கருவிகளை சீரமைப்பது, திறமையான வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பது, போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கவிப்பது போன்றவற்றுக்கு ஆண்டுதோறும், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்க உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் நவீன வசதிகள் கொண்ட தடகளம், ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம் ஆகியவை அடங்கிய விளையாட்டு வளாகம் 17.35 கோடி ரூபாய செலவில் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, தமிழ் துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான தங்கும் இடத்தை அமைப்பது மற்றும் பிற 2000 கோவில்களுக்கு தேவையான பணிகளை செய்ய 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
இந்திய மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இருக்கும் இடங்களில் தமிழ் சங்கம் அமைக்க ஐந்து கோடி ரூபாய் செலவிட உள்ளதாக தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த இந்த திட்டத்தை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜோஹனெஸ்பெர்க் பல்கலைக்கழகம், மலேசியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஜாப்னா பல்கலைக்கழகங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)