This Article is From Jan 10, 2020

சக்திமிக்க வாசகங்களுடன் வண்ணமயமாக காட்சி தரும் கோவை ரயில் நிலையம்!!

மின் தூக்கி (Escalator) அமைந்திருக்கும் சுவற்றில் மிக அழகாக வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றில், 'அனைவருக்கும் கல்வி', 'பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்', 'தண்ணீரை பாதுகாப்போம்' போன்ற சக்தி மிக்க வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

சக்திமிக்க வாசகங்களுடன் வண்ணமயமாக காட்சி தரும் கோவை ரயில் நிலையம்!!

ரயில்வேத்துறை கோவை ரயில் நிலைய காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

New Delhi:

கோவை ரயில் நிலையத்தில் வண்ணம் தீட்டப்பட்ட சுவர்களும், எழுதப்பட்ட வாசகங்களும் பயணிகளின் பார்வையை வெகுவாக ஈர்த்து வருகிறது. 

கோவை ரயில் நிலையத்தில் நுழை வாயிலில் மின் தூக்கி அமைக்கப்பட்டிருக்கும் சுவர் உள்ளது. இதில் தற்போது அழகான வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. இவை காண்போரின் கண்களை கவர்கின்றன. 

அவற்றில், 'அனைவருக்கும் கல்வி', 'பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்', 'தண்ணீரை பாதுகாப்போம்' போன்ற சக்தி மிக்க வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்த அழகான பணியை, ரவுன்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு செய்திருக்கிறது. பல இடங்களில் உள்ள சுவர்களில் இந்த அமைப்பினர் வண்ணம் பாய்ச்சியுள்ளனர். 

இந்த காட்சிகளை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. 
 

முன்னதாக ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் கலைநயம் மிக்க ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. டெல்லி ரயில் நிலையத்தில், இத்தாலிய கலைஞர்கள் ஓவியம் தீட்டியிருந்தனர். 
 

.