Read in English
This Article is From Jul 10, 2020

ஹாட்ஸ்பாட்டாகத் தகிக்கும் சென்னை! மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கல்!

தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 46,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
தமிழ்நாடு

ஹாட்ஸ்பாட்டாகத் தகிக்கும் சென்னை! மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கல்!(File)

New Delhi:

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை தகித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

கொரோனா நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இந்த ஆலோசைனக்கு பின்னர், சென்னை தொடர்ந்து ஹாட்ஸ்பாட்டாக உள்ளது என்றும் இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக குறைவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா நிலைமை குறித்து தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருடன் விரிவாக கலந்துரையாடினேன்.

தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 46,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, உயிரிழப்பு விகிதமானது 1.39 சதவீதமாக குறைவாக உள்ளது. 

ஆரம்பகால நோயறிதலின் மூலம் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தமிழகம் கவனம் செலுத்தி வருகிறது. 350 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் வாகனங்களை செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் தினமும் 35,000 முதல் 40,000 பேர் வரை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து, சோதனையை அதிகரிக்கவும் மற்றும் பிற கட்டுப்பாட்டு உத்திகள் குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி, நாட்டில் தற்போது 8,01,286 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement