This Article is From Dec 30, 2019

தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது; எடப்பாடி அரசுக்கு நன்றி! - மு.க.ஸ்டாலின்

மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.

தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது; எடப்பாடி அரசுக்கு நன்றி! - மு.க.ஸ்டாலின்

இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது.

ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சென்னையில் நேற்றைய தினம் மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக காவல்துறையினர் கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். 

இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கோலம் போட்டு மக்கள் CAA மற்றும் NRCக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் 6 பேரும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பதிவில் பகிர்ந்த மு.க.ஸ்டாலின் கூறியதவாது, 

மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

.