This Article is From Jun 15, 2018

அரசு இ- சேவை மையம் நாளை செயல்படாது

அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெறவும், அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறவும், தமிழகம் முழுவதும் 10,423 இ - சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

அரசு இ- சேவை மையம் நாளை செயல்படாது
தமிழக அரசு இ- சேவை மையம் நாளை (சனிக்கிழமை) செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெறவும், அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறவும், தமிழகம் முழுவதும் 10,423 இடங்களில் இ - சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை சர்வர் லோட் சோதனை செய்யப்பட உள்ளதால், இ - சேவை மையம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக திங்கள் அன்று தான் இ-சேவை மையம் திறக்கும் என்றும் தமிழக அரசின் இணையதள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.