Read in English
This Article is From Dec 27, 2019

''விடுமுறை நாட்களில் 1-8 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லை'' - தமிழக அரசு அறிவிப்பு!!

1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.

New Delhi:

விடுமுறை நாட்களில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கிடையாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நர்ஸரி, மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைப்பது மன அழுத்தத்தை தரும் என்பதால், "விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது" என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

தமிழகத்தில் தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 3-ம்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. 

வட இந்தியா முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதையடுத்து, அரியானா மாநிலத்தில் டிசம்பர் 26-ம்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அங்கு அடுத்த சில நாட்களில் பனி குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

Click here for more Education News

Advertisement