Read in English
This Article is From May 24, 2019

Election Results 2019: ''தமிழகத்தையும் ஒரு மாநிலமாக மோடி பார்க்க வேண்டும்'' - கமல்!! #LiveUpdates

Tamil Nadu Lok Sabha Election Results 2019 Updates: கருத்துக் கணிப்பு முடிவுகளை உண்மையாக்கி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 351 இடங்களை கைப்பற்றி உள்ளன. இவற்றில் 302 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

Advertisement
இந்தியா Posted by

Live Tamil Nadu Election Results: தேர்தல் குறித்த அனைத்து தகவல்களை NDTV தமிழ் உடனுக்குடன் வழங்குகிறது.

கருத்துக்கணிப்பில் கூறப்பட்டபடியே பாஜக கூட்டணி நாடு முழுவதும் 351 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டுமே 302 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரேயொரு தொகுதியில் வென்றுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

தேர்தல் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்த பகுதியில் அளிக்கப்படுகின்றன. லைவ் அப்டேட்ஸை பெற இந்த தளத்தில் இணைந்திருங்கள்...

May 24, 2019 13:43 (IST)
ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற கனிமொழி!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவிஞர் கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

May 24, 2019 13:26 (IST)
ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து!!

தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

May 24, 2019 12:54 (IST)
''இந்தியாவை மேலும் வலுப்படுத்தி, உலகளவில் இந்தியாவை முதன்மை நாடாக பிரதமர் மோடி உயர்த்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.'' - அன்புமணி ராமதாஸ் பேட்டி


May 24, 2019 12:46 (IST)
ஜெகனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!!

ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி தோல்வி அடைந்துள்ளது. கடந்த வாரம்தான் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை சந்தித்து சென்றார். 

May 24, 2019 12:22 (IST)
வாக்கு சதவீதம் அதிகம்பெற்ற திமுக!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மொத்தம் பதிவான வாக்குகளில் 32.76 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 12.76 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 



Advertisement
May 24, 2019 12:18 (IST)
''மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு கவிழும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. இதற்காக அவர் ராஜினாமா செய்வாரா?. மத்திய பாஜகவுக்கு எதிராக தவறான பிரசாரங்களை செய்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது'' - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!! 

May 24, 2019 11:42 (IST)
''எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்துள்ளார்கள். பாஜகவின் பி டீன் யார் என்பதை செய்தியாளர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நேர்மையான வழியில் நாங்கள் பயணிப்பது நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் நேர்மையின் ஏ டீம்'' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி. 

May 24, 2019 11:31 (IST)
''தமிழகத்தையும் மோடி ஒரு மாநிலமாக பார்க்க வேண்டும். நாங்கள் பாஜகவின் பி டீம் அல்ல. எனக்கு அரசியல் தொழில் அல்ல. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் பிரதமர் மோடி பார்க்க வேண்டும்.'' - கமல் பேட்டி

May 24, 2019 11:13 (IST)
சென்னையை வசமாக்கிய திமுக!

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 மக்களவை தொகுதிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. வடசென்னையில் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

May 24, 2019 11:09 (IST)
முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர். இந்த தேர்தலில் ஜோஷி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் அவர். 

May 24, 2019 11:06 (IST)
3.87 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் பதிவான வாக்குகளில் 3.87 சதவீதத்தை கைப்பற்றியுள்ளது. 

May 24, 2019 11:03 (IST)
''திராவிட இயக்கங்களின் உழைப்பு இன்னும் உயிர்ப்போடு இருப்பதை தமிழக தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன'' - கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்திய பின்னர் கனிமொழி பேட்டி

May 24, 2019 10:59 (IST)
அத்வானியுடன் மோடி - அமித் ஷா சந்திப்பு!!

ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்  ஷா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 


May 24, 2019 10:46 (IST)
ஜூன் 30-ல் பிரதமர் மோடி பதவியேற்கிறார்!

நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி  350-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டுமே 300-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. இந்த நிலையில் மோடி மீண்டும் பிரதமராக வரும் 30-ம்தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

May 24, 2019 10:37 (IST)
ஸ்டெர்லைட்டை மூட நடவடிக்கை!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இங்கு கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜக தமிழக தலைவர் தமிழிசை.

May 24, 2019 10:33 (IST)
ஸ்டாலினுக்கு மன்மோகன் வாழ்த்து!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. புதுவையில் காங்கிரஸ் வென்றுள்ளது.

 
May 24, 2019 10:26 (IST)
தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்த அமமுக!!

மக்களவை தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4.8 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எந்த தொகுதியும் தினகரனின் கட்சி டெபாசிட் வாங்கவில்லை. 

May 24, 2019 10:13 (IST)
ஸ்டாலினை வாழ்த்திய ரஜினி!

பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ஸ்டாலினை ரஜினி வாழ்த்தியுள்ளார். தமிழகத்தில் 37 தொகுதிகளை வென்றுள்ளது திமுக கூட்டணி. 

May 24, 2019 09:41 (IST)
நீண்ட இழுபறிக்கு பின் திருமாவின் வெற்றி அறிவிப்பு!


சுமார் 4 மணிநேர இழுபறிக்கு பின்னர் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். 

May 23, 2019 23:15 (IST)
திருமாவளவன் தொடர் முன்னிலை!

சிதம்பரம் தொகுதியில் 4,95,850 வாக்குகள் பெற்று திருமாவளவன் தொடர் முன்னிலை வகித்து வருகிறார்.





Advertisement