இரவு 8:15 நிலவரப்படி திருமாவளவன், 4,59,305 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
2019 மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், பானை சின்னத்தில் போட்டியிட்டார். இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
முதல் 5 சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது சந்திரசேகர், திருமாவளவனை விட சில ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். ஆனால், ஒரு கட்டத்திற்கு பின்னர் திருமா, சந்திரசேகரை எட்டிப்பிடித்தார். ஒரு சமயம் அவர் சந்திரசேகரை முந்தினார்.
இரவு 8:15 நிலவரப்படி திருமாவளவன், 4,59,305 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சந்திரசேகர், 4,58,803 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் சில சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே பாக்கி இருப்பதால், இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி மொத்தம் இருக்கும் 39 தொகுதிகளில் 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 22 சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் திமுக 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.