This Article is From Apr 18, 2019

விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது அதிமுக புகார்!!

மத்திய சென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். வாக்களித்த பின்னர் அவர் பேட்டி அளித்து தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக புகார் கூறியுள்ளது.

விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது அதிமுக புகார்!!

அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுவதாக அதிமுக கூறியுள்ளது.

Chennai:

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிகளை மீறியதாக திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலினும், தயாநிதி மாறனும் வாக்களித்த பின்னர் அளித்த பேட்டியை சுட்டிக் காட்டி அதிமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஊடகத்திற்கு பேட்டி அளித்த இருவரும், தாங்கள் மத்திய அரசை மாற்றுவதற்காக வாக்களித்ததாகவும், மக்களும் இதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். 

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் ''மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் மீதும், தயாநிதிமாறன் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

.