சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்த சவுந்திரராஜன் குமாரசாமி
Coimbatore: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் (Mechanical Engineer), தண்ணீரில் செயல்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியாளரான சவுந்திரராஜன் குமாரசாமி என்பவர்தான் இந்த தனித்துவமான கண்டுபிடிப்பிற்குப் பின் இருப்பவர். இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டன. உலகிலேயே, இந்த மாதிரியான கண்டுபிடுப்புகளில் இதுவே முதல் கண்டுபிடிப்பு. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்." என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த இயந்திரம், சில நாட்களுக்கு முன்னர், ஜப்பானில் அறிமுகமாகிவிட்டது. இந்தியாவிலும் வெகுவிரவில் அறிமுகமாகும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
"இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் என் கனவு. இதற்காக, இந்தியாவில் உள்ள பல தயாரிப்பாளர்களின் ஆலுவலக கதவுகளையும் தட்டியுள்ளேன். ஆனால், அங்கு எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதனால், நான் ஜப்பான் அரசாங்கத்தின் பார்வைக்கு இதை எடுத்துச் சென்றேன். அங்கு எனக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில், இந்த இயந்திரம் ஜப்பான் நாட்டில் பயன்பாட்டிற்கு வந்துவிடும்" எனப் பொறியாளர் சவுந்திரராஜன் கூறியுள்ளார்.