This Article is From Dec 02, 2019

கனமழை காரணமாக சென்னை, அண்ணா பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைப்பு

நேற்று மண்டபம் கடற்கரை பகுதியில் 6 மீன்பிடி படகுகள் கரையில் மோதி சேதமடைந்துள்ளன.

கனமழை காரணமாக சென்னை, அண்ணா பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைப்பு

Tamil Nadu: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Chennai:

கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்பின் காரணமாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளிலும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மற்றும் சென்னை ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே கடலோர மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 பேர் பலத்த மழை காரணமாக வெளியேற்றப்பட்டதாகவும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். 

மாநில பேரிடர் படை வீரர்கள், சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் ராமேஷ்வரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மண்டபம் கடற்கரை பகுதியில் 6 மீன்பிடி படகுகள் கரையில் மோதி சேதமடைந்துள்ளன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.