Read in English
This Article is From Sep 05, 2019

முதல்வர் பழனிசாமியின் (Palanisamy) அமெரிக்கப் பயணம் மூலம் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வரவுள்ளது..?

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர்

Advertisement
தமிழ்நாடு Edited by

முன்னதாக இங்கிலாந்து சென்ற அவர், அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக துபாய் செல்கிறார்

Chennai:

மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்நிலையில், 16 நிறுவனங்கள் மாநிலத்தில் சுமார் 2,700 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநிலத்தில் 16 நிறுவனங்கள் சுமார் 2,780 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. பல்வேறு துறைகளில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது. ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆலை ஒன்றை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. 

இந்த புதிய முதலீடுகள் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக இளைஞர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

“தொழில் செய்வதற்கான ஏதுவான சூழல் தமிழகத்தில் உள்ளது. வரி முறையில் இருக்கும் சலுகைகள், நிதி சார்ந்த மானியங்கள், மிகவும் திறன் வாய்ந்த மக்கள் சக்தி, தடையில்லாத மின்சார சப்ளை, மிகவும் உயர்ந்த உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை தமிழகத்தை முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய இடமாக மாற்றியுள்ளது. 

சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 43 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்வதற்கான 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கும், தொழில் செய்வதற்குமான சூழல் இருக்கும் காரணத்தினால்தான் இவ்வளவு பெரிய முதலீடுகளைப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

Advertisement

தமிழக அரசு விமானத் துறை மற்றும் ராணுவத் துறை சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு எதுவான சூழலை எனது அரசும், எனது மாநிலமும் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலீட்டாளர்கள் முன்னிலையில் நேற்று உரையாள்ளினார் முதல்வர் பழனிசாமி. 

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர். முன்னதாக இங்கிலாந்து சென்ற அவர், அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக துபாய் செல்கிறார். அங்கும் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசிவிட்டு, செப்டம்பர் 10 ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி. 

Advertisement


 

Advertisement