Read in English
This Article is From Oct 02, 2018

கால்நடைகளின் கணக்கெடுப்பை ஆரம்பித்தது தமிழக அரசு!

இந்த கணக்கெடுப்பின் மூலம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்றாற் போல் கொள்கைகள் வகுக்கப்படும் என்று தெரிகிறது

Advertisement
தெற்கு

இந்த கணக்கெடுப்பின் மூலம் தான் கால்நடைகளுக்கான கொள்கை முடிவுகள் வகுக்கப்படும்

Chennai:

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் கால்நடைகளை கணக்கெடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம், கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்றாற் போல் கொள்கைகள் வகுக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘கால்நடைகள் தொடர்பான கணக்கெடுப்பு 90 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 31 ஆம் தேதியுடன் இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவு பெறும். 3,887 கணக்கெடுப்பாளர்கள், 795 கண்காணிப்பாளர்கள், 130 அதிகாரிகள் இந்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

விலங்குகள் நலத் துறை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதைப் போன்ற கணக்கெடுப்பை மேற்கொண்டு, கொள்கை முடிவுகளை வகுக்க உதவி வருகின்றது.

இதுவரை இல்லாததைப் போன்று, கணினி மற்றும் இணையதளம் வசதிகள் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்ட உள்ளது. இதனால், முடிவுகளை தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement