This Article is From Mar 18, 2019

சேலத்தில் வருகிறது இந்துஸ்தான் விமான உற்பத்தி ஆலை..!?

2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு மட்டும் இந்திய அரசு, 3.06 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது.

சேலத்தில் வருகிறது இந்துஸ்தான் விமான உற்பத்தி ஆலை..!?

ஒரே ஆண்டில் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 20,000 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Chennai:

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், உற்பத்தி ஆலையைக் கொண்டு வர தமிழக அரசு முயன்று வருகிறது. மத்திய அரசின் ‘டிஃபென்ஸ் காரிடரின்' ஒரு பகுதியாக இந்துஸ்தான் ஆலையை கொண்டு வர மாநில அரசு முயலும் என்று தெரிகிறது. 

இது குறித்து சிறு மற்றும் குறு தொழில் துறை அமைச்சகத்தின் செயலர் டி.பி.யாதவ் பேசுகையில், ‘சேலத்தில் நிறைய இட வசதி உள்ளது. ஆகவே, இந்துஸ்தான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை அங்கு கொண்டு வர அனைத்து கட்ட முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்று கூறினார். 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் ‘டிஃபென்ஸ் காரிடர்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 3,038 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஓசூர், சேலம், கோவை மற்றும் திருச்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு வேண்டிய ஆயுதங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. 

இந்தத் திட்டத்தின் கீழ் பல பொதுத் துறை நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன. 

தமிழகத்தைப் போலவே, உத்தர பிரதேசத்திலும் ஒரு ‘டிஃபென்ஸ் காரிடரை' தொடங்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு மட்டும் இந்திய அரசு, 3.06 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இது சென்ற நிதி ஆண்டில் 2.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஒரே ஆண்டில் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 20,000 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இந்தியாதான், அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடும் ஆகும். 
 

.