Read in English
This Article is From Nov 16, 2019

இடஒதுக்கீடு ரீதியான பதவி உயர்வு செல்லாது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்த இட ஒதுக்கீடும் தேவை அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு, வெவ்வேறு அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும். தமிழக அரசு ஏற்படுத்திய சட்டப்பிரிவுகளுக்கு சட்டப்படியான ஒப்புதல் கிடையாது.

Advertisement
தமிழ்நாடு Edited by

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பத்தது. : High Court

chennai:

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி வழங்குவது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டம் 2016ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில் இடஒதுக்கீடு அடைப்படையில் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த சட்டத்தின் அடிப்படையில் அரசு துறைகளில் பதவி உயர்வு சீனியாரிட்டியும் வழங்கப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பத்தது.  

அதன்படி : எந்த இட ஒதுக்கீடும் தேவை அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு, வெவ்வேறு அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும். தமிழக அரசு ஏற்படுத்திய சட்டப்பிரிவுகளுக்கு சட்டப்படியான ஒப்புதல் கிடையாது. உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் இந்த சட்டப்பிரிவுகள் உள்ளன. இதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. 

Advertisement

மக்கள் நல அரசு அனைவரின் நலன்களையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அரசு பின்பற்றிய நடைமுறையால் அதிக அளவில் ஒதுக்கீடு வருகிறது. 2003ம் ஆண்டில் இருந்தது, இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 

பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது என்பதற்காக சட்ட விரோத நடைமுறையை நியாப்படுத்த முடியாது. அரசு பின்பற்றிய நடைமுறையானது 69 சதவீதத்துக்கும் அதிகமாக மறைமுக ஒதுக்கீடு செய்வதாக உள்ளது. எனவே, அரசு பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டப்பிரிவுகள் செல்லாது. 12 வாரங்களில் சீனியாரிட்டி நிர்ணயம்  செய்ததை மாற்றி அமைக்க வேண்டும் இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. 

Advertisement
Advertisement