தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 21 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் நான்காவது முறையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா கால நிவாரண நிதியாக தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பூத்யமமாக ரூ 2,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில் “பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்தர, தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை மனதார பாராட்டுவதுடன், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பினமாக ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும்.“ என தெரிவித்துள்ளார்.
அதே போல சென்னை மநாகராட்சியில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக உள்ள பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா ரூ 1,000 ரொக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.