சர்ச்சைகளைக் கடந்து ஒரு மொழியை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.
Chennai: மும்மொழிக் கல்விக் கொள்கையை எதிர்த்த தமிழ்நாட்டில் தான் தென்னிந்திய மாநிலங்களில் அதிகம் ஹிந்தி மொழியை படித்து தேர்ச்சி பெறும் மாநிலமாகவும் உள்ளது. தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா கொடுத்த புள்ளிவிவர தகவல்களின் படி தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மகாத்மா காந்தி 1918 இல் தென்னிந்திய மாநிலங்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது ஹிந்தி பிரசார சாப. 2018இல் 5.80 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். தென்னிந்திய மாநிலங்களிலே தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
ஆந்திரா (தெலுங்கான உட்பட) 2.4 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். கர்நாடாகவில் -60,000 பேரும், கேரளத்தில் 21,000 பேரும் தேர்வு எழுதியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவரங்களை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சமை பொது செயலாளர் எஸ்.ஜெயராஜ் பகிர்ந்துள்ளர். சர்ச்சைகளைக் கடந்து ஒரு மொழியை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது என்று தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டில் 2.68 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். 2018இல் 5.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 6 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
“கடந்த 100 ஆண்டுகளாக ஹிந்தி மொழியை கற்பித்து வருகிறோம். ஒரு மொழியை அறிந்திருப்பது உங்களின் அறிவை விரிவுபடுத்தும். மேலும் இது ஒரு மனிதனின் தேவையைத்தாண்டி பல நன்மைகளைக் கொடுக்கிறது.
இந்த மையம் ஹிந்தியில் தேர்ச்சியடைய 6 கட்ட தேர்வினை நடத்துகிறது. ஒருநபர் குறைந்தபட்சம் 4 கட்ட தேர்வினை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது அதன் பின் மத்திய அரசு மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டியதில்லை என கல்விக் கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தது.