. தமிழரான சிவனின் சாதனையை கெளரவிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Chennai: அப்துல்கலாம் விருதினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக் கொண்டார். விண்வெளித்துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுகிறது.
இந்த விருந்து சுதந்திர தினத்தன்று வழங்கப்படவிருந்தது. சிவன் அன்றைய நாளில் விருதினைப் பெறவில்லை. இந்நிலையில் தலைமை செயலகத்தில் சிவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதினை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். இந்த விருதானது ரூ. 5 லட்சம் காசோலை 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.
நிலவினை ஆராய சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி சிவன் தலைமையிலான இஸ்ரோ குழு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழரான சிவனின் சாதனையை கெளரவிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
63 வயதான சிவன் தன் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். 1980இல் மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸில் விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் பின்னர் இஸ்ரோவில் சேர்ந்தார். டாக்டர் விக்ரம் சரபாய் ஆராய்ச்சி விருது (1999) உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.