நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.46 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தினை கடந்துள்ளது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கையில் தமிழகம் அதிக பாதிப்பினை சந்திக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடையே உரையாற்றினார்.
இதில், கொரோனா காலக்கட்டங்களில் தமிழக அரசு செய்துள்ள நிவாரணப்பணிகளை பட்டியலிட்டார். மேலும், தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் மக்கள் அளித்த ஒத்துழைப்பையும் பாராட்டினார். 86 சதவிகிதத்தினருக்கு தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருப்பதால் மக்கள் இனி வரும் நாட்களிலும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் களத்தில் பணியாற்றுபவர்களின் பங்கினை முதல்வர் பெரிதும் பாராட்டினார்.