கேரளா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை கணித்துள்ளது.
New Delhi: தமிழகத்தில் நேற்று தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர் , புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரை, கோவை, கடலூர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை கணித்துள்ளது.
விதர்பா, சத்தீஸ்கர் , அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், மகாராஷ்டிரா, கொங்கன் மற்றும் கோவா தெலுங்கானா மற்றும் வடக்கு கர்நாடக போன்ற இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கங்கை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு அரேபிய கடல், மேற்கு -மத்திய மற்றும் வடக்கு அரேபிய கடல், கொமொரின் பகுதி, லட்சத்தீவும் மன்னார் வளைகுடா, குஜராத் கடற்கரை மற்றும் கேரள கடற்கரை ஆகியவற்றின் கடல் நிலைமைகள் கூடுதல் அபாயகரமாகியுள்ளது. (காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும்)
மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்.