This Article is From Jun 28, 2019

பரபரப்பான அரசியல் சூழ்நிலையல் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையல், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையல் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையல், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

தொடர்ந்து, திங்கள் முதல் ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். இதேபோல், 9 அதிமுக எம்எல்ஏக்களும் பதவியேற்றனமர்.

இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. இதில், நான்கு மாத இடைவெளிக்கு பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை 23 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

இதேபோல், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்பு, பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது.

குறிப்பாக, பேரவைத் தலைவர் தனபால் மீது திமுகவினர் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேரவைத் தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் போது அதற்கு எதிராக எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிப்பர் என்ற எண்ணிக்கை, வெள்ளிக்கிழமை நடைபெறும் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதால், அந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

.