This Article is From Feb 22, 2019

பள்ளி வளாகத்தில் ஆசிரியை படுகொலை! - கடலூரில் பயங்கரம்!

காய்த்ரி மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்யா. சம்பவத்தின் போது ரம்யா வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் ஆசிரியை படுகொலை! -  கடலூரில் பயங்கரம்!

காய்த்ரி மெட்ரிகுலேசன் என்ற பள்ளியில் 5ஆம் வகுப்புக்கு கணித ஆசிரியராக இருக்கிறார் ரம்யா.

Chennai:

கடலூர் மாவட்டத்தில் 23 வயதான தனியார் பள்ளி ஆசிரியர் பள்ளி வளாகத்திலே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காய்த்ரி மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரம்யா. சம்பவத்தின் போது ரம்யா வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரம்யாவுக்கு பள்ளி அருகிலே வீடு இருப்பதால், தினமும் சிக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். அப்படி இருக்கும்போது, சம்பவத்தின் அன்று ராஜசேகர் என்பவருக்கும் ரம்யாவுக்கும் பெரும் வாதம் நடந்துள்ளது. அதன் பின்னரே ரம்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜசேகரை ரம்யா திருமணம் செய்ய மாறுத்ததாலே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

கல்லூரி நாட்கள் முதலே ராஜசேகருக்கும் ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 6 மாதத்திற்கு முன்பு ரம்யாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி அவரது பெற்றோரிடம் ராஜசேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், ரம்யாவின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கும் என போலீசார் கருதுவதாக என்டிடிவியிடம் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜசேகர் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் தனது சகோதரிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் ரம்யாவின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க - “சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

.