Read in English
This Article is From Jul 19, 2019

இன்ஸ்டாகிராமில் ‘பக்’ இருப்பதைக் கண்டுபிடித்த தமிழருக்கு அடித்த ஜாக்பாட்!

“பக் குறித்து நான் கண்டுபிடித்த உடனேயே, ஃபேஸ்புக் பாதுகாப்பு குழுவுக்கு தெரியப்படுத்தினேன்."

Advertisement
இந்தியா Edited by

"நான் அனுப்பிய அறிக்கையில் தெளிவான தகவல் இல்லாததால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்துள்ளனர்"

New Delhi:

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இருக்கும் ‘பக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையா. இதற்காக அவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம், 30,000 டாலர் சன்மானம் வழங்கியுள்ளது. 

பக்-ஐ கண்டுபிடித்தது குறித்து முத்தையா, “நான் கண்டுபிடித்த பக் மூலம், ஒருவரின் அனுமதி இல்லாமலேயே அவரின் தனிப்பட்ட தகவல்களை எடுக்க முடியும்” என்று கூறி அதிர்ச்சிக் கிளப்புகிறார். 

அவர் மேலும், “பக் குறித்து நான் கண்டுபிடித்த உடனேயே, ஃபேஸ்புக் பாதுகாப்பு குழுவுக்கு தெரியப்படுத்தினேன். ஆனால், நான் அனுப்பிய அறிக்கையில் தெளிவான தகவல் இல்லாததால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் வீடியோ சாட்சியத்தைத் தொடர்ந்து பக் இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

தொடர்ந்து பாதுகாப்பு குழு, நான் கண்டுபிடித்த பக்-ஐ சரிசெய்துவிட்டனர். எனக்கும் அவர்களின் பவுன்டி ப்ரோக்ராமிற்குக் கீழ் 30,000 டாலரை பரிசாக வழங்கினார்கள்” என்று சன்மானம் வென்ற கதையைப் பகிர்கிறார். 

Advertisement

முத்தையா, இப்படியொரு முக்கியமான விஷயத்தைக் கண்டிறிந்திருக்கும் இந்நேரத்தில், சைபர் செக்யூரிட்டி வல்லுநர் பால் டக்லின், “உங்களது சமூக வலைதள கணக்குகள் ஹாக் செய்யப்பட்டால், அதை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்த புரிதல் இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அசட்டையாக இருந்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.” என்று எச்சரிக்கிறார். 

முத்தையா, இதற்கு முன்னரும் ஃபேஸ்புக்கில் இருந்த பக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement