வைகோ நலமாக உள்ளார் - கட்சி அறிக்கை
Chennai: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திங்களன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைகோவிற்கு ஓய்வு மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு அவர் கலந்து கொள்ள இருந்த பொது நிகழ்ச்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டன.
75 வயதான வைகோ “இதய செயல்பாடு குறித்த மதிப்பீட்டிற்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வைகோ நலமுடன் இருப்பதாகவும் சு. துரைசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வைகோ நலமாக உள்ளார். கட்சித் தொண்டர்கள் அவரை உடனடியாக காண வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும் என்றும் போனில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் 20 முதல் தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக 3 நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவையாவும் ஒத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.