This Article is From Jun 28, 2018

நீட் தேர்வு - தமிழகத்தில் மருத்துவம் படிக்க தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பை தொடர நேட்டிவிட்டி எனப்படும் தமிழகத்தில் வசிப்பதற்கான, வாழ்விடச் சான்றிதழ் சமர்ப்பிப்பது காட்டாயம்.

நீட் தேர்வு - தமிழகத்தில் மருத்துவம் படிக்க தரவரிசைப் பட்டியல் வெளியீடு
New Delhi:

தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. www.tnhealth.org என்ற தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டுக்கு என தனி பட்டியலும், தனியார் ஒதுக்கீட்டுக்கு என தனிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கே. கீர்த்தனா என்ற மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், 720க்கு 676 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவிலான நீட் தரவரிசையில் 12-வது இடம் பிடித்திருந்தார்.

அரசு ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் 25,417 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பை தொடர நேட்டிவிட்டி எனப்படும் தமிழகத்தில் வசிப்பதற்கான, வாழ்விடச் சான்றிதழ் சமர்ப்பிப்பது காட்டாயம்.

விளக்கமாக சொல்ல வேண்டுமானால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், தமிழகத்திலேயே 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களும் வாழ்விடச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மற்ற மாநிலஙகளில் 6 - 12-ம் வகுப்பு வரை படித்திருந்தால், மாணவர்களின் பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்கும் சான்றிதழ்கள் வேண்டும். பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமோ, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், பொது பிரிவைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர்.

.