Read in English
This Article is From Aug 14, 2019

மழையினால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

மழையினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பீட்டை அதிகாரிகள் ரூ.199.23 கோடியாக மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

15 நாள்களில் தற்காலிக வீடுகள் கட்டப்படும் என்று அவர் கூறினார்.

Udhagamandalam :

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலைபாங்கான நீலகிரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அங்கு மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் ரூ. 199.23 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிலச்சரிவு மற்றும் மழையினால் 6 பேர் பலியாகியுள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிலச்சரிவு மற்றும் கடுமையான மழையினால் பாதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மாவட்டத்தின் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

Advertisement

கடந்த வியாழக்கிழமை முதல் மாவட்டத்தில் மழைப் பொழிவு 1,700மி.மீக்கு மேல் பெய்துள்ளது. 

மழையினால் ஏற்பட்ட சேதத்தின்  மதிப்பீட்டை அதிகாரிகள் ரூ.199.23 கோடியாக மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

மழையினால் 1,350 வீடுகள் சேதமடைந்துள்ளன.15 நாள்களில் தற்காலிக வீடுகள் கட்டப்படும் என்று அவர் கூறினார்.

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டை துணை முதல்வர் மறுத்துள்ளார். 

Advertisement