This Article is From Jul 31, 2020

தமிழ்நாடு ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 96.04% தேர்ச்சி! - நேரடி லிங்க் உள்ளே

கடந்த ஜூலை 16 ஆம் தேதி, தமிழக ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 96.04% தேர்ச்சி! - நேரடி லிங்க் உள்ளே

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு அல்லது ப்ளஸ் 2 தேர்வில், 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இன்று காலை 11வது வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன
  • சில நாட்களுக்கு முன்னர் 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன
  • விரைவில் 10 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்படும்

தமிழக ப்ளஸ் 1 அல்லது 11வது வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 96.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அரசு தேர்வுகள் இயக்குநரகமான டிஜிஇ, 11வது வகுப்புத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். 

மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்:

*         tnresults.nic.in
*         dge1.tn.nic.in
*         dge2.tn.nic.in

எப்படி முடிவுகளை அறிவது?

முதல் படி: மேலே குறிப்பிட்டுள்ள எந்த இணையதளத்தில் வேண்டுமானாலும் உள் நுழையவும்.

இரண்டாவது படி: ‘ப்ளஸ் 1' தேர்வு முடிவுகளுக்கான லிங்கை கிளிக் செய்யவும்

மூன்றாவது படி: வேண்டிய விவரங்களை உள்ளிடவும்

நன்காம் படி: சப்மிட் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மாணவர்கள், தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்துள்ள மொபைல் எண்களுக்கும் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 

கடந்த ஜூலை 16 ஆம் தேதி, தமிழக ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் டிஜிஇ, கூடிய விரைவில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு அல்லது ப்ளஸ் 2 தேர்வில், 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கூடுதலாக இருந்தது. 

மாவட்ட வாரியாக திருப்பூரில் அதிகபட்சமாக 97.12 சதவீத தேர்ச்சி விகிதம் இருந்தது. அதைத் தொடர்ந்து ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் முறையே 96.99 மற்றும் 96.39 சதவீத தேர்ச்சி விகிதம் உள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் மிகக் குறைவாக 86.21 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். 

.