This Article is From Jun 18, 2020

ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு

தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வித் தரம் மற்றும் சில அம்சங்களை ஆய்வு செய்து கல்விக் கட்டணத்தை இந்த குழு நிர்ணயிக்கும்.

ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக புத்தகங்கள் அச்சிடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறப்பது தாமதம் அடைந்துள்ளது
  • தனியார் பள்ளிகள் கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது
  • ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் டூ முடிவுகள் வெளி வரும் என அமைச்சர் தகவல்

ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் டூ முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில், குடிமராமத்து பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.  அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுகின்றன. எனவே இந்த குறுகிய காலத்திற்குள் பாடங்களை  நடத்தி முடிப்பது தொடர்பாக, பாடத் திட்டங்களை வகுப்பதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வித் தரம் மற்றும் சில அம்சங்களை ஆய்வு செய்து கல்விக் கட்டணத்தை இந்த குழு நிர்ணயிக்கும்.

ப்ளஸ்டூ தேர்வு முடிகள் ஜூலை  மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். 

கொரோனா பாதிப்பு காரணமாக புத்தகங்கள் அச்சிடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்படியும், ஜூன் மாத இறுதிக்குள் புத்தகங்கள் அச்சிடும் பணி நிறைவு பெற்று விடும். சரியான நேரத்தில் மாணவர்கள் புத்தகங்களை பெற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

.