This Article is From Dec 11, 2019

“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார்!”- அதிரடி காட்டும் தமிழக போலீஸ்!

Nirbhaya Rape Case- கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி, சுபாஷ், தன் நிலைப்பாடு குறித்து திகார் சிறைத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்

“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார்!”- அதிரடி காட்டும் தமிழக போலீஸ்!

"“நிர்பயாவை தூக்கிலட ஹேங்-மேன் யாரும் இல்லை என்று ஒரு செய்தியில் படித்தேன்"

Chennai:

Nirbhaya Rape Case- நாட்டின் தலைநகர் டெல்லியில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் நிர்பயா. அச்சம்பவத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் நிர்பயா. அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 4 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து சொல்லப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஹெட் கான்ஸ்டபிள் எஸ்.சுபாஷ் ஸ்ரீநிவாசன் என்பவர், குற்றவாளிகளைத் தூக்கிலிடத் தயார் என்று தெரிவித்துள்ளார். 

“நிர்பயாவை தூக்கிலட ஹேங்-மேன் யாரும் இல்லை என்று ஒரு செய்தியில் படித்தேன். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் மன்னிக்கு முடியாதவர்கள். அவர்களின் தண்டனை தள்ளிப்போடப்படக் கூடாது,” என்று கூறியுள்ளார் சுபாஷ்.

ராமநாபுரம் மாவட்டத்தில் இருக்கும் தமிழக காவல் துறையின் பயிற்சி மையத்தில் பணி செய்து வருகிறார் சுபாஷ். அவரின் தாத்தா, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவப் படைப் பிரிவில் இருந்தவர். 

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி, சுபாஷ், தன் நிலைப்பாடு குறித்து திகார் சிறைத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களின் பின்னூட்டத்துக்காக தற்போது காத்திருக்கிறார். 

“நான் சிறைத் துறைக்கு எனது போன் எண்ணையும் கொடுத்துள்ளேன்,” என்று சொல்லும் சுபாஷ், 1997 ஆம் ஆண்டு, தமிழக காவல் துறையில் இணைந்தார். 

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வாய்ப்பு கிடைத்தால், தனது முடியை மழித்து தன் குல தெய்வத்திற்குக் காணிக்கையாக வைப்பதாக சபதம் எடுத்துள்ளாராம் சுபாஷ்.

2013 ஆம் ஆண்டு, தனது வீரதீர செயலுக்காக அரசிடம் விருது பெற்றவர் சுபாஷ். கிணற்றில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த குழந்தையையும் பெண்ணையும் காப்பாறியதற்காக சுபாஷிற்கு விருது கொடுக்கப்பட்டது. 

தன் செயல் குறித்து நினைவுகூர்ந்த சுபாஷ், “எனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று சென்று பார்த்தால், வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குழந்தை விழ, அதைக் காப்பாற்ற அதன் அத்தையும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். நான் உடனே, கிணற்றுக்குள் குதித்து இருவரையும் காப்பாற்றினேன்,” என்கிறார். 

.