திருடுபோன போனுடன் காவலர் கோபாலகிருஷ்ணன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் பிடிபட்டார்.
Tirunelveli, Tamil Nadu: திருநெல்வேலியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வட இந்தியர்கள் சிலர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விலை உயர்ந்த செல்போனை திருடியதாக தற்போது கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்னும் காவலர் பெட்டிங்கில் ஈடுபட்டதாக விசாரிக்கப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஒன்பது போன்களில் ஒன்றைத் திருடியுள்ளார்.
போன் திருடுபோனது அறிந்ததும் விசாரித்தபோது, கோபாலகிருஷ்ணன் தனது காவலர் குடியிருப்பில் போனுடன் சிக்கினார் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், ரிசர்வ் காவல்படை வீரர்களின் பல பொருட்களை அவர் திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.