This Article is From Sep 07, 2018

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் குறித்த முக்கிய தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் குறித்த முக்கிய தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு குறித்து முடிவெடுக்குமாறு தமிழக ஆளுநரை கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது தமிழக அரசு.

இந்த வழக்கை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது.

இந்த தீர்ப்பை வரவேற்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ், இந்த தீர்ப்பு குறித்து மத்திய அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது எனவும், குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.