ஜன.26ஆம் தேதியன்று பிரதமர் மோடி குறித்து மதிமுக பிரமுகர் அவதூறாக சித்தரித்த படத்தை பதிவிட்டுள்ளார்.
New Delhi: முகநூலில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்ததாக சீர்காழியை சேர்ந்த மதிமுக பிரமுகர் சத்தியராஜ் பாலு கைது செய்யப்பட்டார்.
இவர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து, முகநூல் பக்கத்தில் அவதூறாகப் பதிவிட்டிருந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சீர்காழி பாஜக நகரத் தலைவர் சுவாமிநாதன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சத்தியராஜ்பாலு கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம்
அருகே மதிமுக தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கறுப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன. இதேபோல் சமூகவலைதளங்களிலும் #கோபேக்மோடி என்ற வாசகங்கள் பகிரப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக சீர்காழியை சேர்ந்த மதிமுக நகர செயலாளர் சத்தியராஜ் பாலு மோடி குறித்து அவதூறு படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து சீர்காழி பாஜக நகரத் தலைவர் சுவாமிநாதன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சத்தியராஜ் பாலு கைது செய்யப்பட்டார்.